காந்திகிராம கிராம பல்கலைக்கழகத்தில் நடந்த 38வது பட்டமளிப்பு விழாவில்,முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ்.லட்சுமணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
நிலக்கோட்டை,அக்.06:
காந்திகிராம கிராம பல்கலைக்கழகத்தில் நடந்த 38வது பட்டமளிப்பு விழாவில்,2023–24 மற்றும் 2024–25 கல்வியாண்டுகளில் படித்த சுமார் 2700 மாணவ மாணவியர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தில்,38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது,விழாவிற்கு பல்கலை வேந்தர் டாக்டர் கே.எம்.அண்ணாமலை தலைமை வகித்து பட்டங்களை வழங்கினார்,துணைவேந்தர் என்.பஞ்சநதம்,முன்னிலை வகித்தார்,பதிவாளர் (பொ) டாக்டர் எம்.சுந்தரமாரி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் உலகப் புகழ் பெற்ற இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் விவிஎஸ். லக்ஷ்மண் க்கு கௌரவ டாக்டர் பட்டம் (Honorary Doctorate) வழங்கப்பட்டது,தொடர்ந்து 2023–24 மற்றும் 2024–25 கல்வியாண்டுகளில் படித்த சுமார் 2700 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கினர்,
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய வேந்தர் அண்ணாமலை தேசிய தரமதிப்பீட்டுக் குழுமம் (NAAC) வழங்கிய A++ தரச் சான்றை பெற்றதில் மகிழ்ச்சி,இந்த விழாவில் பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் A++ தரச் சான்று பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெறுகின்றனர் என்பதில் பெருமை, கடந்த சில ஆண்டுகளில் பல துறைகளில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ள அபாரமான முன்னேற்றத்தைப் பார்த்து பெருமை கொள்கிறேன்,
இது மாணவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் பெருமிதம் அளித்துள்ளது, NAAC A++ அங்கீகாரம் கிடைத்தது.அனைவரின் ஒருங்கிணைந்த உழைப்பின் பலன் எனவும், துணைவேந்தர் உட்பட அனைவரையும் பாராட்டினார்.
மேலும் பல்கலைக்கழகத்தின் பல பேராசிரியர்கள் உலகின் முன்னணி 2% விஞ்ஞானிகளில் இடம்பிடித்திருப்பதும், உலக ஆராய்ச்சிக்கு அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது என்று கூறினார்.
உலகளாவிய முன்னணி பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தங்கள் (MoUs) மேற்கொண்டு, இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சர்வதேச ஆய்வகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
இவ்விழாவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சசிதானந்தம் மற்றும் துறைத் தலைவர்கள்,பேராசிரியர்கள், பணியாளர்கள்,பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.