வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலம்) 05.10.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலம்) 05.10.25



தமிழ் நாடு இ பேப்பர் குழுமம் பற்றிய, கோவை வாசக சொந்தம் திரு.சிவசங்கரின்

மினி சர்வே ரிப்போர்ட்

வித்யாசம் பிளஸ் சுவாரஸ்யம் மிகுந்ததாக இருந்தது.

சிங்கிள் கேள்வியை வாசகர் சிலரிடம் முன் வைத்து, இரண்டு நாள் கடிதமாக அந்த ரிப்போர்ட்டை வடிவமைத்து அசத்திய நேர்த்திக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!


வாசகரின் புதுமை வேட்டைக்கு, ஈடு கொடுக்கும் வகையில் 

வாசக படைப்பாளருக்கு சுதந்திரம் அளித்து ஊக்கப் படுத்தி வரும் 

சீப் எடிட்டர் அவர்களுக்கு, வாசக சொந்தங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றி...

நன்றி!


வாசக நண்பர் சிவசங்கர் அவர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் அன்பான வேண்டுகோள்...


இன்னொரு சந்தர்ப்பத்தில், ஒற்றை கேள்வி சர்வேயாக இல்லாமல், விரிவான தளத்தில் வீரியமான சர்வே எடுத்து ரிப்போர்ட் கொடுத்தால் தமிழ் நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுவினருக்கு பயனுள்ளதாக இருக்கும். ( வாசக உள்ளங்களின் உள்ளக் கிடக்கைகளை துல்லியமாய் உணர்ந்து உயர் தரத்தில் பத்திரிகை களை வெளியிட்டு வரும் ஆசிரியர் குழுவினருக்கு இதெல்லாம் தேவை இல்லை என்பது வேறு விஷயம்.)


சர்வேக்கு தேர்வாகிய அந்த 14 வாசகர் பட்டியலில் எனக்கு இடம் கிடைக்க வில்லை தான்.

ஆனாலும் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் மீது எனக்குள்ள ஈடுபாட்டையும் பிரியத்தையும் காட்ட வேண்டும் என்ற துடிப்புக்கு தீனி போட்டாக வேண்டுமே...


அதனால் தமிழ் நாடு இ பேப்பர் பற்றி என்னுள்ளே ஓடிக் கொண்டிருக்கும் சில கருத்துக்களை எடுத்து வைக்கிறேன்.


செய்திகளை வெளியிடுவதில் 

தெளிவான -- நேர்மையான -- உறுதியான பார்வை.

இந்த விஷயத்தில் தமிழ் நாடு இ பேப்பர் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.


உள்நாட்டு -- வெளி நாட்டு செய்திகளில் 

மிகுந்த கவனமும் முக்கியத்துவமும் காட்டுவதோடு நின்று விடாமல், வட்டார செய்திகளில் தாராளத்தையும் தனித்துவத்தையும் 

வெளிப்படுத்தி வருவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தரமான -- உண்மையான பத்திரிகைக்கு சார்பு நிலை அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 

தமிழ் நாடு இ பேப்பர் 

தனிக் காட்டு ராஜாவாக ஜெயக்கொடி நாட்டி வருகிறது.

ஒரு நாளிதழின் தரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் 

செய்திகளில் குழப்பமே இல்லாமல் 

ஆரம்பம் முதல் இன்று வரை பிசிறில்லாத தெளிவான பாதையில் பயணிக்கும் தமிழ் நாடு பேப்பர் மேலும் மேலும் சிறந்தோங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


(இன்னும் சொல்வேன்)



பி.வெங்கடாசலம்

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%