திருவண்ணாமலை, திருநெல்வேலி, ராணிப்பேட்டை உள்பட 18 கோவில்களுக்கு ரூ.80 கோடியில் 24 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 79 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு கல்லூரி உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் 6 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் 5 திருக்கோயில்களில் 4 முடிவுற்ற திருப்பணிகள், கல்லூரி ஆய்வகம், செயல் அலுவலர் குடியிருப்புகள் மற்றும் 13 ஆய்வாளர் அலுவலகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை, அருணாச லேசுவரர் திருக்கோயில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், பாபநாசசுவாமி கோயில்,
ராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், பண்ணாரி மாரியம்மன் கோயில், ராணிப்பேட்டை சோளிங்கர், லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்,
மயிலாடுதுறை மாவட்டம், மேலையூர், பூம்புகார் கல்லூரியில் 2.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணி;
விழுப்புரம் ஆஞ்சநேயசுவாமி கோயில், தென்காசி மாவட்டம், கடையம் பெரும்பத்து, தோரணமலை முருகன் கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் பட்டீசுவரசுவாமி கோயில், கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி, திம்மராயசுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் திருக்கோயில் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டியவற்றில் அடங்கும்.
ஆயிரம் ஆண்டு கோயில்களை
புனரமைக்கும் திட்டம்
2.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், செரப்பணஞ்சேரி, அருள்மிகு வீமீஸ்வரர் திருக்கோயில், 2.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பின்னவாசல் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், பழைய ஆற்காடு, அருள்மிகு அனந்தீஸ்வரர் சுவாமி கோயில், 2.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேப்பத்தூர், வீற்றிருந்தபெருமாள் கோயில், புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாஞ்சார், தாணுமாலீஸ்வரர் கோயில் ஆகிய 7 திருக்கோயில்களை புனரமைக்கும் திருப்பணிகள்;
என மொத்தம் 79.94 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் க.மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் துரை.ரவிச்சந்திரன், பொ.ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ், அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் ஜெ.பரணிதரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.