திருவாரூர் சொந்த மாவட்டம் என்கிறார்: ஆனால் கருவாடாக காய்கிறது: விஜய் தாக்கு

திருவாரூர் சொந்த மாவட்டம் என்கிறார்: ஆனால் கருவாடாக காய்கிறது: விஜய் தாக்கு

திருவாரூர்,


தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் திருவாரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசியதாவது:


நாகையை போல திருவாரூரும் குடிசைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பல துறைகள் இல்லை. உங்களுடன் ஸ்டாலின் என உங்கள் குடும்பத்தினரிடம் தான் சொல்ல முடியும். மக்களிடம் சொல்ல முடியாது. திருவாரூர் ஒரு மாவட்டத்தின் தலைநகர். ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சரியாக சாலை இல்லை. நெல் கொள்முதலில் மூட்டைக்குக் 40 ரூபாய் கமிஷன் வாங்குகிறார்கள்.


இந்த மாவட்டத்தில் உள்ள மந்திரியின் வேலை சி.எம். குடும்பத்திற்கு சேவை செய்வதுதான். விவசாயிகள் வயிற்றில் அடித்து வாங்கிய கமிஷனுக்கு என்ன பதில்? நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் ஏன்? ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன். கணக்கு போட்டு பார்த்தால் இந்த 4 ,4.5 வருஷத்தில் பல கோடிகள் கமிஷனாக வாங்கியிருக்கிறார்கள். இதை சொன்னதே விவசாயிகள்தான்.


விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள். சி.எம்.சார்..இது உங்க ஆட்சியில் நடந்துள்ளது. கல்வி,ரேஷன், மருத்துவம், மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு , சட்டம் ஒழுங்கு என அடிப்படை விஷயங்களில் சமரசமே கிடையாது. உண்மையான மக்களாட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சியாக இருக்கும். எங்க போனாலும் இது சும்மா கூட்டம்..ஓட்டு போட மாட்டாங்கன்னு சொல்றாங்க..அப்படியா? இது சும்மா கூடுற கூட்டமா?” இவ்வாறு விஜய் பேசினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%