ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது; நிர்மலா சீதாராமன் பேச்சு

ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது;  நிர்மலா சீதாராமன் பேச்சு

கோவில்பட்டி,


தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா கோவில்பட்டியில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த விழவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது: -


தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. எம்.பி. இல்லையென்றால் என்ன, அதுவும் பாரத நாட்டின் ஒரு பங்குதான், அங்கும் சிறப்பாக நாம் செயல்பட வேண்டும் என நினைத்து பிரதமர் மோடி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு மீது பிரதமருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம் உள்ளது.


இந்த விழாவை பிரதமருக்கான பாராட்டு விழாவாக கருதுகிறேன். அவருடைய ஆதரவு இல்லாமல் நாம் எதையுமே செய்திருக்க முடியாது. தென் மாவட்டங்களில் உள்ள பெரிய திட்டங்களுக்கு பிரதமர்தான் காரணம்.இந்த முறை ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை, புரட்சி செய்யப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு பெரிய மாற்றத்தை எடுத்து வந்திருக்கிறோம். 375 பொருட்களுக்கு விலை குறைய உள்ளது. 10 சதவீதம் குறைத்துள்ளோம்.


28 சதவீதத்தில் இருந்து 18 ஆகவும், 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரக்கூடிய ஆதாயம் என்பது மக்களுக்கான ஜிஎஸ்டி சேமிப்பு என்பதுதான். ஜி.எஸ்.டி. வரிக்குறைப் பினால் கிடைக்கும் சேமிப்பை உங்கள் குடும்ப நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.ஜி.எஸ்.டி. புரட்சியை, பிரதமர் மோடி மக்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு எல்லாரும் வழிவகுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%