நடிகர் விஜயை விமர்சிக்க அமைச்சர்களுக்கு திடீர் தடை

நடிகர் விஜயை விமர்சிக்க அமைச்சர்களுக்கு திடீர் தடை

இனி விஜயை விமர்சித்து திமுக அமைச்சர்கள் யாரும் பதில் கூற வேண்டாம். எல்லாவற்றையும் கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளனர். பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், கடந்த வாரம் சனிக்கிழமை (13-ந் தேதி) தனது பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார்.


தொடர்ந்து, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், பெரம்பலூர் பயணத்தை திடீரென ஒத்திவைத்தார். இந்த நிலையில், 2-வது வாரமாக பிரசாரத்தை தொடங்கியுள்ள விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.


விஜய் தனது பேச்சின்போது, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், சட்டசபை தேர்தலில் டி.எம்.கே.வுக்கும் (தி.மு.க.), டி.வி.கே.வுக்கும் (தமிழக வெற்றிக்கழகம்) இடையேதான் போட்டி என்று கூறுவதுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.


சமீபத்திய அவரது கருத்துக்கு அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் பதிலடி கொடுத்தனர். ஆனால், ஒவ்வொரு அமைச்சரின் பதிலும் வெவ்வேறாக இருந்ததால் கட்சித் தலைமை அதிருப்தி அடைந்தது. இனி விஜயை விமர்சித்து அமைச்சர்கள் யாரும் பதில் கூற வேண்டாம். எல்லாவற்றையும் கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும்.


ஏதாவது, விஜய் கருத்துக்கு பதில் அளிக்கும் நிலை ஏற்பட்டால், கட்சித் தலைமையில் இருந்தே அது வெளிவரும். அமைச்சர்கள் அனைவரும் தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று கூறினால் போதும் என்று தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது அமைச்சர்கள் யாரும் விஜய் குறித்து கருத்து தெரிவிப்பது இல்லை.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%