திருவில்லிபுத்தூர், ஜன.- தமிழக அரசின் சார்பில், தமிழகம் முழுவதும் கல்லூரி களில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக் கணினி வழங்கும் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடை பெற்றது. இந்த விழா கல்லூரி முதல்வர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் உதவி ஆட்சியர் முகமது இர்பான் கலந்து கொண்டு, மாணவ–மாணவியர்களுக்கு மடிக் கணினிகளை வழங்கினார். விழாவிற்கு கணிதவியல் துறைத் தலைவர் அமுதா அனைவரையும் வரவேற்றார். வணிகவியல் துறைத் தலை வர் சரவணகைலாஷ், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வின் முடிவில், கணினி அறிவியல் துறைத் தலை வர் ரவி நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?