வருசநாடு அருகே குடும்பத் தகராறில் 2 மகன்களுடன் பெண் தற்கொலை
Jan 08 2026
18
வருசநாடு, ஜன. தேனி மாவட்டம், வருசநாடு அருகே தண்டியகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபெருமாள் (40). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் தேவா, நீதி என்ற 2 மகன் களும் உள்ளனர். கூலி வேலை செய்யும் ஜெயபெரு மாள் தினந்தோறும் மது குடித்து விட்டு மனைவி தனலட்சுமி யுடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. குடியை நிறுத்தும் படி மனைவி தனலட்சுமி பலமுறை வலியுறுத்தியும் அதனை பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி, தனது 2 மகன்களையும் தூக்கிக் கொண்டு தண்டியன்குளம் ஓடைப்பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் கிணற்றில் தனலட்சுமி மற்றும் மூத்த மகன் தேவா ஆகியோர் தண்ணீரில் பிணமாக மிதப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார், தீய ணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் மிதந்த தன லட்சுமி மற்றும் சிறுவன் தேவா ஆகியோரின் உடலை மீட்ட னர். மேலும் கிணற்றுக்குள் 2 வயது சிறுவன் நீதியின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?