சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, 34,084 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஜன.9 முதல் 14 வரை சென்னையில் இருந்து 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப் படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் துறையின் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப் படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 10 முன்பதிவு மையங்கள், கோயம்பேட்டில் ஒரு முன்பதிவு மையம் அமைக்கப்படும். பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக 15,188 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து திரும்பும் பயணிகளுக்காக ஜன.16 முதல் 19 வரை மொத்தமாக 25,008 பேருந்துகள் இயக்கப்படும். பொங்கலுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஊருக்குச் செல்லும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, ஓஎம்ஆர், திருப் போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி, அல்லது வண்ட லூர் வெளிச்சுற்று சாலையை தேர்வு செய்யலாம் என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?