தீபாவளி பண்டிகையின் ஐந்து நாள் விசேஷம்

தீபாவளி பண்டிகையின் ஐந்து நாள் விசேஷம்

முதல் நாள் கோவர்த்தன துவாதசி

பொதுவாக தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடுவது வடகத்தியரின் வழக்கம் . அதன் தாத்பர்யத்தை பார்த்தபோது நாமும் கடைபிடிக்கலாம் என்று தோன்றியது . தீபாவளி பண்டிகை முதலில் துவாதசி நாளில் இருந்தே துவங்குகிறது , பசுக்களை ஆராதிப்பது என்பது நம் முன்னோர்களை ஆராதிப்பதற்கு சமம் . கோமாதா என்பவள் லட்சுமி தேவியின் அம்சம் . பசு ஒரு தேவதைகளுக்கு சமமாக காமதேனுவாக போற்றப்படுவது நாம் அறிந்ததே .

முதல் நாளில் கிருஷ்ண பரமாத்மாவிற்கு மிக பிடித்தமான பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் நாம் கோதுமை மற்றும் வெல்லம் கலந்த ஒரு பாயசம் அளிப்பது அடுத்து வரும் நாட்களுக்கான முன்னோட்டமாக இருக்கும் .

அந்த காலத்தில் வீடுகளில் பசு இருந்தது . தற்கால அடுக்கு மாடிகளில் பசுக்களை காண்பது அரிது . சில பல வீடுகளில் பசுவும் கன்றும் சேர்ந்த சிலை வைத்து வழிபடுகிறார்கள் .

நாம் வீட்டில் கோதுமை வெல்லம் சேர்த்த பாயசம் செய்து அந்த பசுக்கன்று சிலைக்கு நெய்வேத்தியம் செய்து பின்னர் அருகில் உள்ள கோவில்களில் பசு மடம் அல்லது கோசாலை இருந்தால் அங்கு சென்று பசுக்களுக்கு தந்து ஆசி பெறலாம் .

விவசாயத்தை நம்பி இருக்கும் கிராமங்களில் பசுக்களுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் இருக்கும் . பசுக்களை ஆராதிப்பதன் மூலம் முதலில் நாம் தீபாவளி கொண்டாட்டத்தில் பித்ருக்களை திருப்தி படுத்தவும் முடியும் .

குஜராத்தியர் மற்றும் மஹாராஷ்டிரர்கள் கோவர்த்தன துவாதசியை வாசு பர்ஸ் என்கிறார்கள் .

இரண்டாம் நாள் தன திரயோதசி என்கிற தந்தேரஸ் மூன்றாம் நாக சதுர்த்தி என்று தெற்கில் கொண்டாட படுவது வடக்கில் சோட்டி தீபாவளி என்று பெரிய தீபாவளிக்கு தயார் செய்கிறார்கள் !!

நான்காம் நாள் அமாவாசை அன்று தீபாவளி . கேதார கௌரி விரதம் என்கிற நோம்பு நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாடி முடிக்கிறோம் . ஆனால் வடக்கில் பலி பாடமி என்று பிரதமை நாள் மற்றும் பாய் தூஜ் என்று சகோதரிகள் சகோதரர் சந்தித்து மகிழ்வது கொண்டாடுகிறார்கள் .

தீபாவளி அன்று நாம் லட்சுமி பூஜை செய்கிறோம் . ஐந்தாம் நாள் லட்சுமி மற்றும் குபேர பூஜை செய்து ஐந்து நாட்கள் நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் .

சில வருடங்கள் முதல் நாள் தீபாவளியும் மறு நாள் அம்மாவாசை என்றும் வருவதுண்டு ,இந்த வருடம் தீபாவளி பண்டிகை முதல்நாளும் மறுநாள் அம்மாவாசையுமாக வருகிறது

நாளை தன திரயோதசி என்கிற தந்தேரஸ் ஏன் கொண்டாடுகோரோம் என்று பார்ப்போம் .



செல்லம் சேகர் 

No .157.School Main Road

F2. Sri Paduka Apartments 

Krishnamachari Nagar

Valasaravakkam 

Chennai 600 087


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%