
ஒரு காலை, வீட்டில் சத்தம் அதிகமாகவே கேட்டது. சுரேஷும் மாலாவும் உரத்த குரலில் சண்டைப்பட்டுக் கொண்டிருந்தனர். கதவுகள் மூடப்பட்டது. பாத்திரங்கள் பக்கத்தில் கிடந்தன. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் இது ஒரு பெரிய குடும்ப பிரச்சனை போல் தோன்றியது.
ஆனால் உண்மையில் எளிமையானது அவர்கள் சண்டைக்கான காரணம்—சமையலறை!
மாலா அந்த காலை சமையலுக்குப் பிறகு எண்ணெய் பாட்டில்கள், மிளகாய்ப் பொடி, பூண்டு உரித்தவை போன்றவையெல்லாம் அப்படியே விட்டுவிட்டாள். அடுப்பங்கரையருகில் மிளகாய்ப் பொடி சிதறியிருந்தது.
சுரேஷின் கோபம் வெறும் சுத்தமின்மையைப் பற்றியது இல்லை. அது ஒரு ஆழமான கவலையின் வெளிப்பாடாக இருந்தது.
சுரேஷ் மெளனமாக சொன்னான்:
“ஒரே ஒரு தீப்பொறி போதும் மாலா… நம் வீடும், நம் வாழ்வும் சாம்பலாகிவிடும்.”
அந்த வார்த்தைகள் மாலாவை அமைதியில் ஆழ்த்தின.
அவள் பார்வையில் நன்றியும் புரிந்துணர்வும் கலந்தன.
அந்த நொடியில் சண்டை முடிந்தது. அது வெறும் சத்தமல்ல… பாதுகாப்பு அக்கறை அதன் ஒருவகை வெளிப்பாடு தான் என்பதை உணர்ந்தாள்
------
ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?