அன்பான வாசகர்களுக்கு வணக்கம்.
இன்றைய நமது தமிழ்நாடு இ இதழில் கவனம் ஈர்த்த செய்திகள் :
இலங்கை பிரதமர் ஹரிணி அமர சூர்யா 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த 3 நாட்களில் அவர் நடத்தவிருக்கும் பேச்சுக்களில் தமிழக மீனவர் துயரம் பற்றியும் அதை நீக்குதல் பற்றியும் 30 நிமிடங்களாவது ஆலோசித்தாலே மகாசாகர் தொலைநோக்குப் பார்வை மற்றும் அண்டை நாடுகளுக்கான முன்னுரிமை என்பது அர்த்தமுள்ளதாகும். இதை உறுதி செய்வது இந்திய மக்கள் நல அரசின் கடமை.
தமிழக சட்டசபையில் சூடானா விவாதம் நடக்கிறது. எதிர்க்கட்சி கரூரைக் காட்டுகிறது. ஆளும் கட்சி தூத்துக்குடியைக் காட்டுகிறது. பி. எஸ். வீரப்பா பாணியில் சொன்னால் சபாஷ், சரியான போட்டி !!
சுங்கச்சாவடி கழிப்பறை சுத்தம் பேணும் முயற்சியில் அறிவிக்கப்பட்ட பரிசுத்திட்டம் வரவேற்புக்குரியது.
மேற்குக் கடற்புரத்தின் கோவா சுற்றுலாப் பயணிகளுக்கு அற்புதமான சொர்க்கம் என்பதை கட்டுரை கச்சிதமாகக் காட்டியுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?