வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 16.10.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 16.10.25



தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.


தீபாவளி நெருங்குகிறது.

'வருஷந் தோறும் வந்து போவது தானே '

என்ற சலிப்பு எட்டிப் பார்க்காத படி மகிழ்வோடு கொண்டாடுவோம்.


கடந்த ஆண்டு மாதிரி 

இல்லாமல், அதற்கும் மேலே என்று பெருமிதம் கொள்ளும் வகையில் தீபாவளி பண்டிகையை அர்த்தப்

படுத்துவோம்.


தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப் பூர்வமாக ஏதாவது செய்து உறுதுணையாக இருப்போம்...


சரி, இன்றைய செய்திகள் பக்கம் வருவோம்.


விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கரூர் நெரிசலுக்கு காரணம் 


பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்.


தாமதம் தலைவர்களுக்கு சொந்தமானது தான் என்றாலும், 7 மணி நேரம் என்பது கூடுதல் தானே...! 


பாகிஸ்தான் -- ஆப்கானிஸ்தான் இடையே 48 மணி நேரம் சண்டை நிறுத்தம்.


இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் . நல்ல செய்தியைத் தொடர்ந்து, இன்னொரு குட் நியூஸ்!


போருக்கான காலம் இதுவல்ல என்று நம் பிரதமர் மோடி முழங்கி

வந்ததற்கு பலன் கிடைக்காமல் போகுமா?


இன்னும் சரியாக சொன்னால், இது உலக அமைதிக்கான 

காலம்...!


இலங்கை பிரதமர் இந்தியா வருகை...


அண்டை நாடுகளோடு பரஸ்பர நேசத்துடன் 

உறவு கொள்ளும் போது பலமும் புத்துணர்வும் பன்மடங்கு பெருகும் என்பது நிச்சயம்.


நடுத்தர வர்க்கத்தின் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசு 


கனி மொழி கண்டனம்.


இந்த தருணத்தில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்யமர் என்று சுவாரஸ்யம் மிளிர பெயர் சூட்டி, பிரபலப் படுத்திய மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைவுக்கு வருகிறார்.

எப்பேர்ப்பட்ட ஜனரஞ்சக எழுத்தாளர் அவர். நினைத்தாலே நெஞ்சம் இனிக்கிறதே!


நலம் தரும் மருத்துவம் பகுதியில், பசலைக்கீரை பயன்களை விவரித்திருந்த கட்டுரை கன ஜோர்!

மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சபாஷ்!


வெளியாகி இருந்த இரு சிறுகதைகள்,

'ம்' கொட்ட வைத்தன.


Boomer to Gen Z 

புத்தம் புது தொடருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

தலைப்பு சூப்பர்!

வித்யாசம் வாழ்க!


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வெளியாகி இருந்த, கமலா சட்டோ பாத்தியாயா வரலாறு படித்து சிலிர்த்துப் பரவசம் ஆனேன்.

அருமை... அருமை!

புதுக் கவிதைகள் அனைத்தும் வழக்கம் போல் ஜோர் ஜோர்!


இன்னும் எடுத்துச் சொல்லி மகிழ எத்தனை எத்தனையோ அம்சங்கள் உண்டு.


மொத்தத்தில் தமிழ் நாடு இ பேப்பர் 

வாசக பெருமக்களுக்கு கிடைத்த சுவாரஸ்ய சுவை மிக்க வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும்.


மதிப்பு மிக்க ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்!


பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%