
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கலை போன்று அல்ல தீபாவளி.... !
குதூகலமாய் புத்தாடை உடுத்தி குழந்தைகளோடு குழந்தையாய் பெரியவர்களும் நாள் முழுக்க பட்டாசு வெடித்த காலம் மாறி..
இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கொண்டாடப்படும் தீபாவளி...
பொங்கலுக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்....
தீபாவளிக்கு சரவெடிகளை பற்றவைத்து ஓடிவிடும் காட்சியும் உண்டு...
பொங்கலுக்கு பலகாரம் பொங்கலே.
தீபாவளிக்கு பல காரங்களின் அணிவகுப்பு...
பொங்கலை விட தீபாவளிக்கு டாஸ்மாக்கில் வருமானம் அதிகம் ஈட்ட இலக்கு நிர்ணயிப்பதும் உண்டு....
புதிதாக திருமணமான மணமக்களுக்கு இது தலைதீபாவளி !
பெண்ணின் தந்தைக்கு தங்கம் விலையால் தலை போகும் தீபாவளி....
இறுதியில்....
தீபாவளிக்கு பொங்கலை சுவைக்கலாம்....
ஆனால் பொங்கலுக்கு தீபாவளியை சுவைக்க முடியாது !
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
----------------------------
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?