தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்


மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (22.09.2025)

முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்

திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 03 பயனாளிகளுக்கு வாகனங்களையும், ஒரு பயனாளிக்கு டிராக்டர் ( 30 சதவீதம் முன் மானியம் மற்றும் 03 சதவீதம் பின் மானியத்தில்) என மொத்தம் ரூ. 67,70,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.மேலும், இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களிடமிருந்து 20 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் உரிய துறைகளுக்கு தக்க நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சீ.ஜெயச்சந்திரன், முன்னாள் படை வீரர் உதவி இயக்குநர் திரு.சங்கர சுப்பிரமணியன் மற்றும் 50க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தென்காசி மாவட்டம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%