தெரு நாய்கள் கடித்து உயிரிழப்பதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது தான் காரணம்: சுப்ரீம் கோர்ட் குற்றச்சாட்டு

தெரு நாய்கள் கடித்து உயிரிழப்பதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது தான் காரணம்: சுப்ரீம் கோர்ட் குற்றச்சாட்டு


புதுடெல்லி, ஜன.-


தெருநாய்கள் கடித்து குழந்தைகள், முதியவர்கள் உயிரிழப்பதற்கு மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் எனக் கூறிய சுப்ரீம் கோர்ட், தெருநாய்க்கடி பாதிப்பு, உயிரிழப்புக்கு மாநில அரசுகள் இழப்பீடு வழங்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


நாடு முழுவதும் தெருநாய்கள் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருப்பதால் தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தெருநாய்களை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்கி அதனை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.


இந்த வழிகாட்டுதல்களை மாற்றி அமைக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.


அப்போது, தெருநாய்களை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என கண்டிப்பான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.


இந்தநிலையில் மீண்டும் அந்த வழக்குகள் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள், தெருநாய்களை கட்டுப்படுத்து வதற்கான வழிகாட்டுதல்களை பல மாநிலங்கள் செயல்படுத்தாமல் இருப்பதற்கு கவலை தெரிவித்த தோடு தெருநாய்களால் பாதிக்கப்படு வோருக்கு யார் நிவாரணம் அளிப்பது? என்ற கேள்வியையும் எழுப்பினர்.


பின்னர் நீதிபதிகள், ‘தெருநாய்க்கடி பிரச்சினைக்கு 75 ஆண்டுகளாக மாநில அரசுகள் எதுவும் செய்ய வில்லை. தெருநாய்க்கடிக்கு மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். நாய்க்கடியால் பாதிக்கப்படு பவர்களுக்கு மாநில அரசுகள் அதிகளவு இழப்பீடு வழங்க வேண்டியது வரும். இதுதொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளை கேட்க உள்ளோம்.


தெருநாய்கள் மீது அக்கறை கொள்பவர்களுக்கும், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும், தெருநாய் களுக்கு உணவளித்து ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது.


தெருநாய்கள் கடித்து குழந்தைகள், முதியவர்கள் உயிரிழப்பதற்கு மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்காதது தான் காரணம். விலங்குகளை மிகவும் நேசிப்பவர்கள் என்றால், அவற்றை ஏன் உங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடாது? என்ற கேள்வியையும் முன்வைக்க விரும்புகிறோம்.


பள்ளிகள், மருத்துவமனைகள், தெருக்களில் சுற்றி திரியும் தெரு நாய்கள் அப்பாவி மக்களை கடித்து பயமுறுத்துவதை எப்படி ஏற்க முடியும்?.


குழந்தைகளை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. இதையெல்லாம் எப்படி கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியும்.


குஜராத்தில் பூங்கா ஒன்றில் நடைபயணம் மேற்கொண்ட வக்கீலை தெருநாய் கடித்த நிலையில், அந்த நாயை பிடிக்க சென்ற அலுவலர்களை விலங்குகள் நல ஆர்வலர்கள் எனக்கூறி வக்கீல்கள் தாக்கி உள்ளனர்.


தெருநாய் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. எனவே, இந்த பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகளிடம் செயல்திட்டம் உள்ளதா? இல்லையா? என்பதை பார்க்க வேண்டியது உள்ளது.


எங்களை பொறுத்தமட்டில் சட்டப்பூர்வ விதியை செயல்படுத்த விரும்புகிறோம்’ என தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%