தெள்ளாரில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்: சிஇஓ பங்கேற்பு

தெள்ளாரில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்: சிஇஓ பங்கேற்பு


வந்தவாசி, டிச 27:


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் தெள்ளாறில் 0 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் கோ.குணசேகரன், பச்சையப்பன், வந்தவாசி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெள்ளார் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் பங்கேற்று மாற்றுத்திறன் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கினார். மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திட்ட மேற்பார்வையாளர் தண்டபாணி பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார். முகாமில் குழந்தைகள் நல மருத்துவர், தொண்டை, காது மூக்கு மருத்துவர்கள், எலும்பு முறிவு மருத்துவர் உள்ளிட்டோர் பங்கேற்று மாற்றுத் திறனாளி மாணவர்களை பரிசோதித்து 57 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க பரிசீலனை செய்தனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆறுமுகம், கற்பகவல்லி, பிரபு, பாலாஜி, சிறப்பு பயிற்றுநர்கள் கிரிஜா, பூங்காவனம், பிசியோதெரபிஸ்ட் மோகனா, அலுவலக பணியாளர்கள் சதிஷ் குமார், மகேஸ்வரி, வசந்தி, சித்ரா உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். தெள்ளார் ரோட்டரி கிளப் சார்பில் சாசன தலைவர் டிகேஜி ஆனந்த் மேற்பார்வையில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இறுதியில் வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன் நன்றி கூறினார்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%