தேசிய NSS தினம் – திசையன்விளை மனோ கல்லூரியில் கொண்டாடப்பட்டது
Sep 24 2025
39

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட (NSS) தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது NSS சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், கல்லூரி வளாகத்தைச் சுற்றி 50 பனை விதைகள் நட்டு பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் டி. லில்லி அவர்கள் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பலவேச கிருஷ்ணன் மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர் சண்முகம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அலுவலகப் பணியாளர் நாகராஜன் மற்றும் NSS தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?