
தேர்தல்களில் போட்டியிடாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
சென்னை
நாடு முழுதும் தேர்தல்களில் போட்டியிடாத, தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அதன் விவரம் வருமாறு:-
1.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (ஈஸ்வரன்), 2.மனிதநேய மக்கள் கட்சி (ஜவாஹிருல்லா), 3.மனிதநேய ஜனநாயக கட்சி (தமிமுன் அன்சாரி) 4.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்), 5.எழுச்சி தேசம் கட்சி, 6.கோகுல மக்கள் கட்சி, 7.பெருந்தலைவர் மக்கள் கட்சி (என்.ஆர்.தனபாலன்), 8.தமிழர் தேசிய முன்னணி, 9.தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, 10.விடுதலை மக்கள் முன்னேற்ற கழகம், 11.திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ், 12.தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி, 13.தமிழர் முன்னேற்றக் கழகம், 14.தொழிலாளர் கட்சி, 15.உரிமை மீட்பு கழகம், 16.வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி,17.விஜய பாரத மக்கள் கட்சி, 18.அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, 19.அகில இந்திய பார்வர்டு பிளாக், 20.அகில இந்திய மக்கள் நகர்வு கட்சி, 21.அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், 22.அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம், 23.அகில இந்திய சத்யஜோதி கட்சி, 24.அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம், 25.அண்ணா மக்கள் இயக்கம், 26.அனைத்து இந்திய தொழிலாளர் கட்சி, 27.அண்ணன் தமிழக எழுச்சி கழகம், 28.டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம், 29.எழுச்சி தேசம் கட்சி, 30.இந்திய காதலர்கள் கட்சி, 30.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், 31.மகாத்மா காந்தி தேசிய தொழிலாளர் கட்சி, 32.மக்கள் தேசிய கட்சி, 33.மக்கள் கூட்டமைப்பு கட்சி, 34.மக்களாட்சி முன்னேற்ற கழகம், 35.பச்சை தமிழகம் கட்சி, 36.சமத்துவ மக்கள் கழகம், 37.சிறுபான்மை மக்கள் நல கட்சி, 38.சூப்பர் தேசிய கட்சி, 39.சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம், 40.தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம், 41.தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், 42.தமிழர் தேசிய முன்னணி
---------
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?