
சென்னை:
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் 36 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி வைத்திருந்தார். அவர் இறந்த பின்னர், இந்த தொகையை செலுத்தும்படி அவரது சட்டப்படி வாரிசுகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில், 36 கோடி ரூபாய் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டது. அந்த தொகையை 13 கோடி ரூபாயாக குறைத்து, திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீஸ் மீண்டும் அனுப்பப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சி.சரவணன், 36 கோடி ரூபாய் செலுத்தும் படி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்று விட்டதால், அதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தர விட்டார். 13 கோடி ரூபாய் கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா சட்டப்படியாக நிவா ரணத்தை கோர உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?