
" வெற்றிகள்
தானாய் வந்து
விழுவதில்லை
கிடைப்பதும் இல்லை .... "
பூமிக்கு அடியில்
இருக்கும் விதை
முட்டி மோதி
மண்ணைப் பிளந்து
தலை காட்டுகிறது ......"
இடை விடாத
உழைப்பும் முயற்சியும்
தன் நம்பிக்கையும்
முடிவில் வெற்றியை
எட்டுகிறது ..."
வெற்றிகள் பெறும்
முன் தோல்விகள்
பல உண்டு ..."
தோல்விகளே
வெற்றியின் முயற்சிப்
படிகள் ....."
தோல்விகள் தான்
அனுபவப் பாடம்
வெற்றியின் முகவரி
காட்டும் ரகசியம் ..."
முயற்சி இல்லாமல்
தோல்வியை கூட
எட்ட முடியாது ..."
தோல்வி என்று
எண்ணாமல் பயிற்சி
என்று நினைத்தால்
அதுவே வெற்றி
தான் ... "
தோல்விக்கும்
வெற்றிக்கும்
தூரம் மிகக்
குறைவு ...."
- சீர்காழி. ஆர். சீதாராமன்.
9842371679 .
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?