தோனியை போல கோலியை கொண்டாடும் ரசிகர்கள்

தோனியை போல கோலியை கொண்டாடும் ரசிகர்கள்



ஐபிஎல் போட்டிகளில் கோப்பையை வெல்லும் அணியின் கொண்டாட்டத்தை விட ஒரு முக்கிய நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். சீசன் முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் அந்த ஒரு நிகழ்வை பற்றிதான் பேசிக்கொண்டே இருப்பார்கள்; புகழ்ந்து கொண்டும் இருப்பார்கள். அந்நிகழ்வு என்னவென்றால், சென்னை அணிக்காக பேட்டிங் செய்ய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி களமிறங்கும் போது, ரசிகர்கள் அளிக்கும் உற்சாக வரவேற்பு தான் அது. அவர் எந்த மைதானத்தில் களமிறங்குகிறாரோ, அந்த மைதானத்தின் பெவிலியன் குலுங்கும் அளவிற்கு ரசிகர்கள் உற்சாகக்குரல் இருக்கும். இது எங்களுக்கு கிடைக்கவில்லையே என மற்ற கிரிக்கெட் வீரர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தோனியைப் போல விராட் கோலியையும் ரசிகர்கள் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஞாயிறன்று குஜராத் மாநிலம் வதோராவில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது, கோலிக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இதனால் வதோரா மைதானமே குலுங்கியது. இதனை கோலியே ஒப்புக்கொண்டுவிட்டார். இதுதொடர்பாக கோலி கூறுகையில்,”தோனி களமிறங்கும் போதும் இதே மாதிரி நடந்ததை பார்த்திருக்கிறேன். ரசிகர்கள் உற்சாகமடைவது புரிகிறது. எனினும் நான் என் கவனத்தை ஆட்டத்தில் மட்டும் வைத்துக் கொள்கிறேன்” என அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%