இலங்கை கிரிக்கெட் ஜாம்ப வான் லசித் மலிங்கா “ஸ்லிங்கி (சைட்-ஆர்ம் : பந்து கையை விட்டு வெளியேறும் போது தலைக்கு மேல் அல்லாமல், நெஞ்சுக்கு கீழே தாழ்வான கோணத் தில் செல்லும்)” வகை பந்துவீச்சில் கொடிகட்டிப் பறந்தவர். இத்தகைய பந்துவீச்சு முறை துல்லியமான “யார்க்கர்” பந்துகளை வீசுவதற்கு மிக வும் வசதியாக இருக்கும் என்ற நிலை யில், மலிங்காவைப் போலவே பாகிஸ்தான் வீரர் ஜமான் கானும் பந்து வீசி வருகிறார். இவரை ரசிகர்கள் (பாகிஸ்தான் மட்டும்) “பாகிஸ்தான் மலிங்கா” என்று அழைக்கிறார்கள். இந்நிலையில், ஆஸ்திரேலியா வின் “பிக் பேஷ் லீக் (உள்ளூர் டி-20)” தொடரில் பிரிஸ்பேன் அணிக்காக விளையாடி வரும் ஜமான் கான் பந்துவீச்சு தொடர்பாக புகார் கிளம்பி யுள்ளது. சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர், ஜமான் கானின் பந்துவீச்சு முறை குறித்து நடுவர்களிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நடுவரிடம் அவர் அளித்த புகாரில், “பந்துவீசும் போது ஜமான் கானின் கை மிகவும் தாழ்வாக உள்ளது. இது 4 வயது குழந்தை பந்து வீசுவதைப் போல இருக்கிறது” என வார்னர் கூறியதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. ஜமான் கானின் பந்துவீச்சு தொடர்பாக வார்னர் போன்ற மூத்த வீரர்கள் கேள்வி எழுப்பினாலும்; புகார் அளித்தாலும், நடுவர்கள் மனம் வைத்தால் மட்டுமே இந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) கவனத்திற்கு செல்லும். ஐசிசி புகாரை ஏற்றுக்கொண்டால் பாகிஸ்தான் வீரர் ஜமான் கானின் பந்து வீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?