நடிகர் மோகன்லாலுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா: கேரள அரசு அறிவிப்பு

நடிகர் மோகன்லாலுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா: கேரள அரசு அறிவிப்பு



திருவனந்தபுரம், செப். 30–


தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மலையாள நடிகர் மோகன் லாலுக்கு அக்டோபர் மாதம் 4 ம் தேதி பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.


சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த 71வது தேசிய விருது வழங்கும் விழாவில், மலையாள நடிகர் மோகன் லாலுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை ஜனாதிபதி வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து, நடிகர் மோகன்லாலை கவுரவிக்கும் விதமாக, கேரள அரசின் சார்பில் வரும் அக்டோபர் 4ம் தேதி “மலையாளம் வனோலம், லால்சலாம்” எனும் பெயரில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெறவுள்ளது.


திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கலாச்சார விவகாரத் துறை அமைச்சர் சஜி செரியன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.


மேலும் விழாவில் நடிகைகள் ஊர்வசி, ஷோபனா, மஞ்சு வாரியர், பார்வதி, கார்த்திகா, மீனா, நித்யா மெனன், லிஸ்ஸி மற்றும் பாடகர்கள் சுஜாதா மோகன், சுவேதா மோகன், சித்தாரா கிருஷ்ணகுமார், ஆர்யா தயாள், மஞ்சாரி, ஜோட்ஸ்னா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடிகர் மோகன்லாலை சிறப்பிக்கும் இந்த விழாவிற்கான இலச்சினை நேற்று வெளியிடப்பட்டது.


100 ஆண்டுகளைக் கடந்த மலையாள திரையுலகில் நடிகர் மோகன்லால் 50 ஆண்டுகள் சிறப்பாகப் பங்காற்றியுள்ளதாக அமைச்சர் சஜி செரியன் தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%