நண்பனிடம் கூறுகிறேன்.
மாதத்தின் மீத நாட்களை எப்படி
நீந்தி கடப்பதெனவும்
கையேந்தத்தான் வேண்டும் போலும் கடனுக்காய் எனவுமாய்!
மெலிதாய் சிரித்தவவன் சப்தமின்றி அருகில் வந்து சொல்கிறான்.
இங்கும் நிலைமை அப்படித்தான்.
ஆகவே,,,என சிறிது பேசுகிறான்.
அவனது பேச்சில் கவனம் ஒட்டாது
நீள் ஓட்டம் கொண்டு
தோழனிடம் போய்ச்சொல்கிறேன்.
அவன் கண்ணதாசன் பாடல் வரிகளை ஞாபகம் கொள்ளச்சொல்கிறான்.
உறவினன் மாதம்பிரசவித்ததிலிருந்து கணக்கு எழுதிக் காண்பிக்கிறான் மிகையேதுமின்றி.
அலுவலகத்தின் அருகாமை இருக்கைக்காரர் பாடமெடுப்பதிலும் அறிவுரை சொல்வதிலும் ஆர்வம் கொண்டவராய்.
உடன் படித்தவனிடம் பகிர்ந்துகொண்ட
சமயம் கடந்து வா,முடியும் உன்னால் என்கிறான்.
மனைவியிடம் வந்து சங்கடப்பட்ட தருணத்தில் தலை கோதி சொல்கிறாள்.
மணமான நாளிலிருந்து
சந்தித்த பிற தடைகளனைத்தையும் தாண்டி வர கற்றுத்தந்த நீங்கள்
சற்றே வரம்பு தாண்டி விட்ட
செலவு பற்றியா கவலை கொள்கிறீர்கள்?
குவித்து வைத்துள்ள நம்பிக்கையில் ஒன்றயூன்றி முன்னகருங்கள் என!

விமலன்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?