நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பினேன்’

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பினேன்’

சக்திவேல்- நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால், புற்றுநோய் அபாயத்திலிருந்து விவசாய தொழிலாளி விடுபட்டார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், ஊஞ்சலூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த சண்முகவள்ளி. விவசாயத் தொழிலாளி யான இவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளி ஆவார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் விவசாயிகளை ஒருங்கி ணைத்து, அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பல்வேறு போராட் டங்களை நடத்தும் களப்பணியாளரும் ஆவார். இந்நிலையில், சிவகிரியில் நடை பெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பங்கேற்க இவருக்கு அழைப்பு வந்துள் ளது. உடன் பணியாற்றும் தொழிலாளர்களு டன், இவரும் பங்கேற்றார். அனைத்து பிரிவு மருத்துவர்களும் முகாமில் பங்கேற்றிருந்த னர். சாதாரண பரிசோதனைகள் முதல் சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. முடிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவை யான ஆலோசனைகள், மருந்துகள் உள் ளிட்டவை அளிக்கப்பட்டன. மேற்சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய பரிந்துரைகள் செய்து தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பெண்களுக்கு தனியான மருத்துவர் கள் பணியமர்த்தப்பட்டு முகாம் நடைபெற்று வந்தது. ரத்தம் உள்ளிட்ட பரிசோதனைக ளின் முடிவில் சண்முகவள்ளிக்கு, கர்ப் பப்பை வாய் தொற்று இருப்பது கண்டறிய ப்பட்டது. அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள், ‘திடீர் என தலைவலி, மயக் கம் வந்திருக்குமே. தாங்க முடியாத அள விற்கு வந்திருக்குமே’ என்று கேட்டதற்கு ஆம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து உரிய பரிந்துரைகளுடன் மேல்சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். தொடர்ந்து மருத்துவர் கள் அறிவுறுத்தலின் படி சிகிச்சை மேற் கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரி டம் விசாரித்த போது, நடந்த விபரங்களை பகிர்ந்து கொண்டார். இதன் அடுத்த கட் டம் அதாவது கருப்பை தொற்றின் அடுத்த கட்டம் புற்றுநோயாகும் என்பது மருத்துவர் கள் கூறினர். இதன் அபாயம் சாதாரண விவ சாயத் தொழிலாளர்களுக்கு தெரிவதில்லை. தங்கள் உடல் நலன் குறித்த விழிப்புணர்வு பெரிதாக கிராமப்புற மக்களுக்கு இல்லை. இந்நிலையில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடை முறைப்படுத்தியுள்ளது சிறப்பானது. இதன் மூலம் புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பி னேன், என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%