நாகப்பட்டினம், திருவாரூரில் பிரச்சாரம்: விஜய் தவறான தகவல்களை பரப்பி உள்ளார்: தமிழக அரசு விளக்கம்

நாகப்பட்டினம், திருவாரூரில் பிரச்சாரம்: விஜய் தவறான தகவல்களை பரப்பி உள்ளார்: தமிழக அரசு விளக்கம்

சென்னை, செப்.21–-


த.வெ.க. தலைவர் விஜய், நாகப்பட்டினம், திருவாரூர் தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், தவறான தகவல்களை பரப்பி உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-–


நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தகவல்கள் தவறானவை. அவர், மண் அரிப்பை தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.


ஆனால் உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள், அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 2 மடங்காக உயர்ந்துள்ளது. அரசின் முயற்சியால் கடந்த 2021-ம் ஆண்டில் 45 சதுர கிலோ மீட்டராக இருந்தவை இன்று 90 சதுர கிலோ மீட்டராக பெருகியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன.


நாகப்பட்டினத்தில் கடல்சார் கல்லூரி ஏதும் இல்லை என்று கூறினார். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது. மக்களை சந்திப்பதற்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர், அனுமதி இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை மந்திரியோ தமிழ்நாடு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். சென்னையில் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி பிரதமரின் பேரணிக்கு போலீசார் 20 நிபந்தனைகளை விதித்தனர் என்பதுதான் உண்மை. எனவே தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%