குடிநீர் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிய செயலி: முதல்வர் ஸ்டாலின்
Sep 23 2025
33

குடிநீர் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை குடிநீர் வாரியம் குறித்த அனைத்து புகார்களையும், ஒரே இடத்தில் பதிவு செய்ய ‘சென்னை குடிநீர் செயலி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இடம், புகைப்படத்துடன் புகார் கூறினால் உரிய நேரத்தில் கோரிக்கைகள் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு செய்யப்படும். இல்லையெனில், 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்குப் புகாரளிக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “சென்னை குடிநீர் வாரியம் தொடர்பான அனைத்துப் புகார்களையும் எளிமையாகப் பதிவு செய்ய 'சென்னை குடிநீர் செயலி' எனும் புதிய Mobile App அறிமுகம்!
புகைப்படம் மற்றும் location இணைத்துப் புகார் தெரிவித்தால், உரிய காலத்தில் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு!
இல்லையெனில், 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்குப் புகாரளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?