பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்கு!

பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்கு!

நாகையில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தவெகவினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


நாகையில் தவெக தலைவர் விஜய் சனிக்கிழமையில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், பிரசாரத்தின்போது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக அக்கட்சி நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச் சுவரில் தவெக தொண்டர்கள் ஏறினர். தொண்டர்கள் ஏறியதில் மண்டபத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.


இந்த நிலையில், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, 4 பிரிவுகளின்கீழ் தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.


பிரசாரத்தின்போது, பொதுச் சொத்துக்கோ பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று காவல்துறை முன்னரே அறிவுறுத்தியிருந்தது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%