நாசா நிர்வாகியாக எலான் மஸ்க் நண்பர் நியமனம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
Nov 07 2025
10
வாஷிங்டன், நவ. 5–
புதிய விண்வெளி சகாப்தத்தில் நாசாவை வழிநடத்த எலான் மஸ்க்கின் நண்பரான ஜாரெட் ஐசக்மேனை நிர்வாகியாக நியமித்து அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
திறமையான வணிகத் தலைவர், கொடையாளர், விண்வெளி வீரர் ஜாரெட் ஐசக்மேனை நாசாவின் நிர்வாகியாக பரிந்துரைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விண்வெளி மீதான அவரது ஆர்வம் மற்றும் அனுபவம் எதிர்க்கால ஆய்விற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
நாசாவை புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்ல அவர் பொருத்தமானவர் ஆக இருப்பார். ஜாரெட் ஐசக்மேன், அவரது மனைவி மோனிகா மற்றும் அவர்களது குழந்தைகள் மிலா மற்றும் லிவ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
42 வயதான ஐசக்மேன் ஜாரெட் ஐசக்மேன் அமெரிக்க பில்லியனர்– தொழிலதிபர். விமானி மற்றும் வணிக விண்வெளி வீரரான இவர், 7,000 மணி நேரங்களுக்கும் அதிகமாக விமான பயணம் அனுபவம் கொண்டவர். செப்டம்பர் 2024ல், உலகின் முதல் வணிக விண்வெளி நடைப்பயணம் செய்தவர் என்ற வரலாற்றைப் படைத்தார். டிராகன் இன்டர்நேஷனல் என்ற விமானப் போக்குவரத்து ஒப்பந்ததாரர் நிறுவனத்தையும் நிறுவி உள்ளார். இவர் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?