நாடு முழுவதும் 97,500 செல்போன் டவர்களுடன் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்கினார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் 97,500 செல்போன் டவர்களுடன் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்கினார் பிரதமர் மோடி



ஜார்சுகுடா: பாரத் சஞ்​சார் நிகம் நிறு​வனத்​தின் (பிஎஸ்​என்​எல்) சுதேசி 4ஜி சேவையை ஒடி​சா​வின் ஜார்​சுகடா நகரில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்​கி​வைத்​தார். இத்​துடன் 97,500 செல்​போன் டவர்​களும் திறக்​கப்​பட்​டன.


பிஎஸ்​என்​எல் நிறு​வனத்​துக்கு இது வெள்ளி விழா ஆண்​டாகும். இந்​நிலை​யில், பிஎஸ்​என்​எல் நிறு​வனத்​தின் சுதேசி 4ஜி சேவையை, ஒடி​சா​வின் ஜார்​சுகுடா நகரில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தொடங்​கி​வைத்​தார்.


மேலும், 97,500 செல்​போன் கோபுரங்​களை​யும் பிரதமர் மோடி தொடங்​கி​வைத்​தார். இதில் 92,600 கோபுரங்​கள் 4ஜி தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி இயங்​கக் கூடிய​வை​யாகும். இந்த செல்​போன் கோபுரங்​கள் ரூ.37,000 கோடி செல​வில் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.


இந்த செல்​போன் கோபுரங்​கள் ஒடி​சா, ஆந்​தி​ரா, உத்​தரப் பிரதேசம், மகா​ராஷ்டி​ரா, ராஜஸ்​தான், அசாம், குஜ​ராத் மற்​றும் பிஹார் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் அமைக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் 7,545 4ஜி கோபுரங்​கள் உள்​ளன.


சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் 19 கிராமங்​களில் உள்ள செல்​போன் கோபுரங்​கள் 4ஜி-​யாக தரம் உயர்த்​தப்​படு​கின்​றன. சேலம், கடலூர், வேலூர், மதுரை, ஈரோடு மாவட்​டங்​களி​லும் அதிக அளவி​லான கிராமங்​களில் 4ஜி சேவை வழங்​கப்​படும்.


இந்த செல்​போன் கோபுரங்​கள் அனைத்​தும் இந்​திய தொழில்​நுட்​பத்தை அடிப்​படை​யாகக் கொண்டு செயல்​படும். தொலைத் தொடர்​புத் துறை​யில் சீனா, டென்​மார்க், ஸ்வீடன், தென்​கொரியா போன்ற சில நாடு​கள் மட்​டுமே உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​துகின்​றன. அந்த வரிசை​யில் தற்​போது இந்​தி​யா​வும் இணைந்​துள்​ளது.


இது தொடர்​பாக பிஎஸ்​என்​எல் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: 4ஜி சேவை மூலம் ஒடி​சா​வில் 2,472 கிராமங்​கள் உட்​பட, முன்பு தொலைத் தொடர்பு சேவை கிடைக்​காத 26,700 கிராமங்​கள் இணைக்​கப்​படும். இவற்​றில் பல மிக​வும் தொலை​தூரக் கிராமங்​கள் மற்​றும் தீவிர​வாத பாதிப்பு உள்ள பகு​தி​களாகும்.


இந்த விரி​வாக்​கம் மூலம் பின்​தங்​கிய மக்​களும் டிஜிட்​டல் சேவை மற்​றும் தகவல் தொடர்பை பெற முடி​யும். இதன் மூலம் 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட புதிய சந்​தா​தா​ரர்​களுக்கு தொலைத் தொடர்பு சேவை அளிக்​கப்​படும்.


இதில் முக்​கிய அம்​சம் என்​னவென்​றால், சூரிய மின்​சக்​தி​யில் இயங்​கும் செல்​போன் கோபுரங்​கள் அறி​முகம் செய்​யப்​படு​கின்​றன. இதன் மூலம் 4ஜி கோபுரங்​களுக்கு தடை​யில்லா மின்​சா​ரம் கிடைக்​கும். இது நாட்​டில் மிகப் பெரிய பசுமை தொலைத் தொடர்பு தொகுப்​பு​களை உரு​வாக்​கும்.


சுதேசி 4ஜி சேவை​யுடன், டிஜிட்​டல் பாரத் நிதி திட்​டத்​தை​யும் பிரதமர் மோடி தொங்கி வைத்​துள்​ளார். இந்த திட்​டம் மூலம் சுமார் 30,000 கிராமங்​களில் 100 சதவீதம் 4ஜி சேவை செயல்​படுத்​தப்​படும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவி​க்​கப்​பட்​டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%