இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% எட்டியது

இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% எட்டியது



புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதல் முறை​யாக கார்ப்​பரேட் தலை​மைத்​து​வத்​தில் பெண்​களின் எண்​ணிக்கை 20 சதவீதத்தை எட்​டி​யுள்​ளது.


இதுதொடர்​பாக நியூ​யார்க்கை சேர்ந்த அவதார்​-செ​ராமவுண்ட் ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வில் கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தலைமை பொறுப்​பு​களில் 2016-ல் 13%-​மாக இருந்த பெண்​களின் எண்​ணிக்கை படிப்​படி​யாக அதி​கரித்து 2024-ல் 19% அளவுக்கு உயர்ந்​தது. இந்த நிலை​யில் தற்​போது தலை​மைத்​து​வத்​தில் பெண்​களின் பங்கு முதல் முறை​யாக 20% தொட்​டுள்​ளது. இது சமூகத்​தில் முற்​போக்​கான நிலையை பிர​திபலிப்​ப​தாக அமைந்​துள்​ளது.

உலகம் முழு​வதும் கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தலை​மைப் பதவி​களில் பெண்​களின் பங்கு கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. அதன்​படி இந்த எண்​ணிக்கை 2020-ல் 14%, 2021-ல் 15%, 2022-ல் 17%, 2023-ல் 19%, 2024-ல் 19%-​ஆக இருந்​தது.


சிறந்த நிறு​வனங்​களில் மொத்த பணி​யாளர்​களின் அடிப்​படை​யில் பெண்​களின் பிர​தி​நி​தித்​து​வம் 35.7% -ஆக நிலை​யான​தாக இருந்​தது. குறிப்​பாக, தொழில்​முறை சேவை​கள் துறை​யில் பெண்​களின் பங்கு 44.6% என்ற அளவில் அதி​க​மாக உள்​ளது. இதைத் தொடர்ந்​து, ஐடிஇஎஸ் (41.7%), மருந்து (25%), எப்​எம்​சிஜி (23%), உற்​பத்தி (12%) ஆகிய துறை​கள் உள்​ளன.


இந்​தி​யா​வில் பெண்​களுக்​கான சிறந்த நிறு​வனங்​கள் பட்​டியலில் 125 நிறு​வனங்​கள் இடம் பெற்​றுள்​ளன. அவற்​றில் 15 சதவீதம் ஐடி சேவை நிறு​வனங்​கள், 9 சதவீதம் உலகளா​விய திறன் மையங்​கள். உற்​பத்​தித் துறை 9 சதவீதத்​தை​யும், மருந்​துகள் மற்​றும் நுகர்​வோர் பொருட்​கள் தலா 5 சதவீதத்​தை​யும் கொண்​டுள்​ளன.


இந்​தி​யா​வில் பெண்​களுக்​கான முதல் சிறந்த 10 நிறு​வனங்​களில் அக்​சென்​ஸர், ஆக்ஸா எக்​ஸ்​எல் இந்​தியா பிசினஸ் சர்​வீசஸ், கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ் வேதாந்தா லிமிடெட், ஈஒய், கேபிஎம்​ஜி, மாஸ்​டர்​கார்டு இன்​கார்​பரேஷன், ஆப்​டம் குளோபல் சொல்​யூஷன்ஸ் (இந்​தி​யா) பிரைவேட் லிமிடெட், ப்ராக்​டர் & கேம்​பிள், டெக் மஹிந்​தி​ரா, விப்ரோ ஆகியவை அடங்​கும். இவ்​வாறு ஆய்​வில் கூறப்​பட்​டுள்​ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%