தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்



புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி 4 தென் அமெரிக்க நாடு​களுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.


இதுதொடர்​பான தகவலை காங்​கிரஸ் கட்​சி​யின் தேசிய செய்தித் தொடர்​பாளர் பவன் கேரா வெளி​யிட்​டுள்​ளார். ராகுல் காந்​தி​யுடன் பவன் கேரா​வும் தென் அமெரிக்கா​வுக்கு சுற்​றுப்​பயணம் சென்​றுள்​ளார்.


4 நாடு​களை உள்​ளடக்​கிய இந்த பயணத்​தின்​போது அரசி​யல் தலை​வர்​களை​யும், பல்​கலைக்​கழக மாணவர்​களை​யும், தொழில்​துறை தலை​வர்​களை​யும் ராகுல் காந்தி சந்​தித்து உரை​யாட உள்​ளார் என்று பவன் கேரா தனது எக்ஸ் பக்​கத்​தில் தெரி​வித்​துள்​ளார்.


ராகுல் பயணிக்​கும் 4 நாடு​களின் பெயர்​கள் குறிப்​பிடப்​பட​வில்​லை. எனினும் அந்த நாடு​களின் பட்​டியலில் பிரேசில், கொலம்​பியா நாடு​கள் இடம்​பெறும் என்று தெரி​கிறது. மேலும், ராகுல் காந்தி எத்​தனை நாள் பயணம் மேற்​கொண்​டுள்​ளார் என்ற தகவலும் தெரிவிக்​கப்​பட​வில்​லை. தென் அமெரிக்க நாடு​களின் அதிபர்​கள் மற்​றும் மூத்த அரசி​யல் தலை​வர்​களை, ராகுல் காந்தி சந்​தித்​துப் பேச திட்​ட​மிட்​டிருப்​ப​தாக​வும், ஜனநாயக மற்​றும் இரு​நாட்டு நல்​லுறவை பலப்​படுத்​தும் வகை​யில் இந்த சந்​திப்பு நடை​பெறும் என்​றும் பவன் கேரா​வின் எக்ஸ் தளத்​தில் கூறப்​பட்​டுள்​ளது.


அமெரிக்க வரி விதிப்பை தொடர்ந்​து, இந்​தி​யா​வுடன் பல்​வேறு தொழில் உறவு​களை மேம்​படுத்​து​வது, வேலை வாய்ப்பு மற்​றும் நாட்​டில் உள்ள தொழில்​வாய்ப்​பு​களைப் பற்றி தென் அமெரிக்க நாடு​களுக்கு எடுத்​துரைக்​கும் வகை​யிலும் தொழில​திபர்​கள் மற்​றும் தொழில் அமைப்​பு​களை​யும் ராகுல் காந்தி சந்​தித்​துப் பேச​விருக்​கிறார்​ என்​று தெரியவந்​துள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%