நாமக்கல் அருகே விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து ‘சிறுநீரகம்’ விற்பனை மோசடி

நாமக்கல் அருகே விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து ‘சிறுநீரகம்’ விற்பனை மோசடி

நாமக்கல், ஜூலை 17–


நாமக்கல் அருகே விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து ‘சிறுநீரகம்’ விற்பனை மோசடி நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், அக்ரஹாரம், வெப்படை, குமாரபாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகிறது. இதில் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 1 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாக வும் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்நிலையில் பள்ளிபாளைம் அடுத்த அன்னை சத்தியாநகர் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களை பெங்களூர், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று இடைத்தரகர்கள் மூலம் கிட்னி விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதேபோல் குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து சிறுநீரங்களை விற்பனை செய்வதன் மூலம் 10 லட்சம் ரூபாய் பெற்று தருவதாக கூறி அழைத்து சென்று அறுவை சிகிச்சை செய்ததாகவும், ஆனால் பேசிய தொகையை தராமல் இடைத்தரகர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து மீண்டும் சிறுநீரகம் விற்பனை மோசடி நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%