
தஞ்சாவூர், செப். 16-
ஒரத்தநாட்டில், தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் குறைவாக இருந்ததால் பொதுச் செயலாளர் பிரேமலதா டென் ஷன் ஆனார். நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.பின்னர் பிரேமலதா பேசியது:
இந்த திருமண மண்டபத்தில் ஆயிரம் பேர் உட்கார கூடிய அளவு கொண்டதுனு சொன்னங்கா, ஆனா 500 பேர் தான் வந்து இருக்கீங்க, ஏன் இந்த சரிவு, தொய்வு ஏன், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்து இருக்குனு நம்ம யோசிக்கணும்.
நான் மாவட்ட செயலாளரிடம் கேட்டேன், இன்னைக்கு திங்கள்கிழமை, அதனால சிலர் வரல, எல்லாரும் வேலைக்கு போயிட்டாங்க அப்படின்னு சொன்னார். அப்போ இங்க வந்திருக்கிறவங்களுக்கு வேலை இல்லையா, எல்லாருக்கும் தானே வேலை இருக்கு, எங்களுக்கு வேலை இல்லையா?. இதெல்லாம் வந்து உண்மையான காரணம் கிடையாது. ஸ்கூல் போற பசங்க சொல்லும் காரணம் போல் உள்ளது.
இந்த கூட்டம் தொடர்பான பத்திரிக்கையில் எத்தனை பேருடைய பெயர்கள், அச்சிட்டு இருக்கு. உங்களுடைய பிசினஸ், உங்க குடும்பத்தை நீங்க எப்படி பார்க்கிறீர்களோ, அந்த மாதிரி கட்சியும், உங்களுடைய வேலை தான். நாம கட்சிக்குன்னு வந்தாச்சு, ஒரு பதவிக்குன்னு வந்தாச்சு, அதற்குரிய மரியாதையை நாம் கொடுக்கணும். அப்படி, உங்களுக்கு பதவி மட்டும் போதும், நான் வேலை செய்ய மாட்டேன், என் பெயரை மட்டும் பத்திரிகையில் போடுங்க ஆனா வேலை செய்ய மாட்டேன்னா அப்புறம் எதுக்கு அந்த பதவி தேவையே இல்லையே.
2026 -ல் வெற்றி ஒன்று தான் நம்முடைய கொள்கை, நாம் எந்த கூட்டணி அமைக்கிறமோ அங்கு தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், இதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக இருந்து கட்சி பணியை ஆற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?