நீலகிரியில் செப்டம்பர் 24ந் தேதி சிறுபான்மையின மக்களின் கருத்து கேட்பு கூட்டம்

நீலகிரியில் செப்டம்பர் 24ந் தேதி சிறுபான்மையின மக்களின் கருத்து கேட்பு கூட்டம்

நீலகிரி, செப். 16–


தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரது உத்தரவின்படி மற்றும் சிறுபான்மையினர் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆய்வு கூட்டம் நீலகிரியில் செப்டம்பர் 24 புதன்கிழமை நடைபெற உள்ளது.


சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் பிரதிநிதிகளையும் அன்று காலை 10.30 மணியளவில் பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள கலெக்டரின் கூடுதல் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் மற்றும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.


அதற்கமைய சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களை தெரிவிக்குமாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%