கலாச்சார பரிமாற்றம்; நிபுணர்களுக்குப் பயிற்சி: சுற்றுலா மேம்பாட்டுக்கு பிரான்சுடன் தமிழக அரசு ஒப்பந்தம் கையெழுத்து

கலாச்சார பரிமாற்றம்; நிபுணர்களுக்குப் பயிற்சி: சுற்றுலா மேம்பாட்டுக்கு பிரான்சுடன் தமிழக அரசு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை, செப் 16–


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் பிரான்ஸ் நாட்டின் – வால் டி லாயர் மாகாணத்துடன் கலாச்சார பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


இந்த ஒப்பந்தத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், மற்றும் பிரான்ஸ் நாட்டின் – வால் டி லாயர் மாகாணத்தின் கலாச்சாரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு துணை தலைவர் டெல்பைன் பெனாசி ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும்.


இந்த ஒப்பந்தமானது, பிரான்ஸ் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையில் கூட்டாண்மையின் அடிப்படையில் கலாச்சார பரிமாற்றத்தில் நல்ல அனுபவங்கள் மற்றும் நடைமுறைகளை வகுக்கும். மேலும், பிரான்ஸ் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே கலைஞர்களின் பரிமாற்றத்தை எளிதாக்கி கலைஞர்கள், கலை நிறுவனங்கள், கலாச்சார நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார ஒருங்கிணைந்த திட்டங்களை செயல்படுத்தும். அத்துடன் கலாச்சார பயிற்சி நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை எளிதாக்கி, ஊக்குவிக்க இந்த ஒப்பந்தம் துணை புரியும்.


ஒத்துழைப்பை ஊக்குவிப்பது...


மேலும், இந்த ஒப்பந்தம் சுற்றுலாத் துறையில் பொதுக் கொள்கைகள், அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வது; கலாச்சாரம், வரலாற்று மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது; சுற்றுலா நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பது; பாரம்பரிய கலைஞர்களின் திறன் மற்றும் நிபுணத்துவ பரிமாற்றத்தை எளிதாக்குவது; சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரப் பண்பாடு, தொல்லியல், பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியகத் துறை ஆகிய பயிற்சி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பது மற்றும் எளிதாக்குவது ஆகியவற்றை மேம்படுத்தும். அத்துடன் சுற்றுலாத் துறையில் குறுகிய கால பயிற்சித் திட்டங்களில் மாணவர்களின் பரிமாற்றத்தை எளிதாக்கி கண்காட்சிகள், வர்த்தக நிகழ்ச்சிகள் போன்ற கூட்டு நடவடிக்கை களை ஏற்பாடு செய்யவும் துணை புரியும்.


இந்நிகழ்ச்சியில், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதர் எட்டியென் ரோலண்ட் பீக், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுலாத்துறை இயக்குநர் தா. கிறிஸ்துராஜ், வால் டி லாயர் மாகாண பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%