கடலூரில் 221 குழந்தைகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை: கலெக்டர் சிபி ஆதித்யா வழங்கினார்

கடலூரில் 221 குழந்தைகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை: கலெக்டர் சிபி ஆதித்யா வழங்கினார்

கடலூர், செப். 16–


கடலூரில் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் 221 குழந்தைகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்“ திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா முன்னிலையில் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள 221 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையினை வழங்கினார்.


அப்போது அவர் கூறியதாவது:


தமிழ்நாட்டில் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரக்சூடிய மிகவும் வறிய நிலையில் உள்ள 50,00 குடும்பங்களின், குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் வகையில் அன்புகரங்கள் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். மேலும், அக்குழந்தைகளுக்கு பள்ளி படிப்பு முடிந்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தார்.


அதனை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் 149 பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் , 62 பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் கைவிட்டு சென்ற குழந்தைகள், 8 பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் உடல்ரீதியாக/மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், 2 பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருபவர்களின் குழந்தைகள் என மொத்ம் 221 குழந்தைகள் தகுதியான பயனாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.


இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.எல்லப்பன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சுந்தர், மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%