நீலகிரியில் 12 பேரை தாக்கிக் கொன்ற காட்டு யானயைப் பிடிக்க வனத்துறை உத்தரவு
Sep 17 2025
34

நீலகிரி, செப். 16–
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலியில்,12 பேரை தாக்கி கொன்ற, 'ராதாகிருஷ்ணன்' என, அழைக்கப்படும் காட்டு யானையை பிடிக்க, முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கையை கூடலூர் வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி, பாடந்துறை, தேவர் சோலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி அப்பாவி மக்களை காட்டுயானை தாக்குகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும்சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
சமீபகாலமாக, கூடலூர் ஓவேலியில், 12 பேரை தாக்கி 'ராதாகிருஷ்ணன்' என, அழைக்கப்படும் காட்டு யானை கொன்றது. இந்த காட்டு யானையை பிடிக்க, முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவிட்டுள்ளார்.
அதற்கான நடவடிக்கையை கூடலூர் வனத்துறையினர் துவங்கியுள்ளனர். காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?