சென்னை:
திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவை யொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். “சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளைய ராஜா பொன்விழா ஆண்டு 50” என்ற தலைப்பில், நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் தனது வீடியோ செய்தியில், “இமாலய சாதனையும் எளிமையும் ஒருங்கிணைந்த மாமனிதர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியலிசை, மக்க ளிசை இவற்றுக்கிடையே நிலவிய வேறுபாடுகளை ஒன்றாக்கிய இசை மேதை. அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி” என்று பாராட்டினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?