போத்தீஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை முடிவு

போத்தீஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை முடிவு

சென்னை:

பிரபல ஜவுளிக் கடை நிறுவனமான போத்தீ ஸில் நான்கு நாட்கள் நீடித்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. சோதனையில் 10 கிலோ தங்கம் மற்றும் ரூ.18.2 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. 1977 இல் ஸ்ரீவில்லிபுத்தூரில் கே.வி.பி.சடையாண்டி போத்தி மூப்பனார் தொடங்கிய இந்நிறுவனம், தற்போது நான்கு தலைமுறைகளாக இயங்கி வருகிறது. ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 25 இடங்களில், 12 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தியது. சோதனையில் வெளிநாட்டு முதலீடுகள், வங்கிக் கணக்கு விவரங்கள், சொத்து கொள்முதல் ஆவ ணங்கள் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. ரூ.12 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் வருமான வரி செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%