அடுத்தடுத்து உருவாகும் இரு புயல்கள்: கனமழை எச்சரிக்கை

அடுத்தடுத்து உருவாகும்  இரு புயல்கள்: கனமழை எச்சரிக்கை

சென்னை, செப். 15-

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதி களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் செவ்வாயன்று (செப்.16) ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்.17 ஆம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப் பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கன மழை பெய்யக்கூடும். செப்.18 ஆம் தேதி சேலம், திரு வண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புது வையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.19 அன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், செப்.20 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றா வது வாரத்திலேயே தொடங்கி விடும் என்றும், 2026 ஜனவரி வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து இரண்டு புயல்கள் உருவாகும் என்றும், வழக்கத்தைவிட நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%