நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி விடுவிப்பு திண்டுக்கல் எம்.பி.யின் கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சர் பதில்

நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி விடுவிப்பு திண்டுக்கல் எம்.பி.யின் கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சர் பதில்

திண்டுக்கல், செப்.15 -

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உத்தரவாத திட்டத்திற்கான நிதி விடுவிப்பு தொடர்பாக ஒன்றிய கிராமப்புற அமைச்சகத் திற்கு அனுப்பிய கடிதத்திற்கு, ஒன்றிய கிராமப்புற வளர்ச்சித் திட்ட அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் பதில் அளித்துள்ளார். எம்.பி.யின் கோரிக்கை 2025 ஆகஸ்ட் 5 அன்று ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., அனுப்பிய கடிதத்தில், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூலி மற்றும் பொருள் கூறு களுக்கான நிதி வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை குறித்து கவலை தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.510.05 கோடி (கூலிக்கு ரூ.80.72 கோடி மற்றும் பொருட்களுக்கு ரூ.429.33 கோடி) நிதி வெளியீடு நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், இத்திட்டம் கிராமப்புற வீடுகளின் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் மற்றும் தொடர் புடைய பணிகளைச் சார்ந்திருக்கும் ஆயிரக்கணக் கான மக்களுக்கு கிராமப்புற வேலைவாய்ப்பை யும் வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது என்று குறிப் பிட்டிருந்தார். இந்த திட்டம் சமூகத்தின் எளிய மற்றும் வறிய பிரிவினருக்கு 100 நாட்கள் கூலி வேலைவாய்ப்பை வழங்கி கிராமப்புற வறுமை யைப் போக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். அமைச்சரின் பதில் இந்நிலையில், 2025 செப்.3 தேதியிட்ட பதிலில் ஒன்றிய அமைச்சர் கமலேஷ் பாஸ்வான், மக்ரேகா திட்டத்தின் கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங் களுக்கு விடுவிப்பு ஒரு தொடர்ச்சியான மற்றும் நடைமுறையில் உள்ள செயல்முறை என்று தெரி வித்துள்ளார். கூலி மற்றும் பொருள் கூறுகள் இரண் டிற்கும் நிதி விடுவிப்பு என்பது, நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படுவ தாகவும், இதற்கு மாநிலத்திடமிருந்து குறிப்பிட்ட வடிவத்தில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் களுக்கு ஏற்ப தேவையான இணக்கங்களும் அவசியம் என்றும் குறிப்பிட்டார். நிதி விடுவிப்பு விவரங்கள் அமைச்சர் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி: 2024-25 நிதியாண்டில் (மார்ச் 31, 2025 வரை) தமிழ்நாட்டிற்கு கூலிக்காக ரூ.5984.03 கோடியும், பொருட்களுக்காக ரூ.1320.51 கோடியும் விடு விக்கப்பட்டுள்ளது. நடப்பு 2025-26 நிதியாண்டில் (ஆகஸ்ட் 26, 2025 வரை) கூலிக்காக ரூ.3717.99 கோடியும், பொருட்களுக்காக ரூ.580.45 கோடியும் விடு விக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் இறுதியில் அமைச்சர் கம லேஷ் பாஸ்வான், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்கீழ் வகுக்கப்பட்டுள்ள படி கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தை அடைவதில் கிராமப்புற அமைச்சகம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று உறுதியளித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%