நீலகிரியில் 294 வார்டுகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்
Jan 04 2026
23
நீலகிரி, ஜன.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி, அவற்றை எடுத்துச் செல்லும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உபகரணங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சி களில் அடங்கிய 294 வார்டுகளுக்கு, மட்டைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, சதுரங்கம் உள்ளிட்ட 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட 423 தொகுப்புகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வீரர், வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த உபகரணங்களை இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் முறையாக பயன்படுத்தி, எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என கலெக்டர் பாராட்டி வாழ்த்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?