நோக்கியா

நோக்கியா



வானதி டீச்சர் ஆந்திராவில் 'ஜெட்சர்லா' என்னும் ஊருக்கு புதிதாய் தமிழ்நாட்டிலிருந்து குடிப்போயிருந்தார்.


தனது மகளை சேர்த்த அதே பள்ளியிலேயே தானும் ஒரு வேலைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஐந்து ஆறாம் வகுப்புகளுக்கு கணித ஆசிரியையாக வேலை கிடைத்தது.


"குட் மார்னிங் டீச்சர்" மீ சாரி பாக உந்தி டீச்சர்" சக டீச்சர் சொன்னதில் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது.


கொஞ்ச நாட்களில் தெலுங்கு கற்றுக்கொண்டலும், தமிழ் பேசுவது போலவே தெலுங்கு பேசும் வானதி டீச்சரை எல்லோருக்கும் பிடிக்கும்.


ஒருமுறை ஒரு முக்கிய புள்ளி ஒருவர் பள்ளிக்கு வர, வானதி டீச்சர் கரஸ்பாண்டட்டிடம் சென்று "மிஸ்டர் செந்தில் அனி ஒகரு ஒச்சிண்டு சார்" என்று சொல்ல, "டீச்சர் ஒச்சிண்டு லேது, ஒச்சேரு அனி மரியாதக செப்பண்டி" என்றதும் ஷாக்கானார் வானதி.


அன்று மதியம் உணவு இடைவேளைக்கு முன் சக டீச்சர் ஒருவர் "மிக்ஸர் வேண்டுமா? நான் எப்போதும் வாங்குவேன். ரொம்ப நல்லா இருக்கும்" என்று சொல்ல சிலர் வாங்கினர்.


வானதி டீச்சரும் அரைக்கிலோ மிக்ஸர் வாங்கினார். ஒரு விஷயம் என்ன வென்றால் வானதி டீச்சர் என்றாலே இடது கையில் நோக்கியா மொபைல், வலது கையில் ஒரு அடி மரஸ்கேல் வைத்திருப்பார்.


பள்ளி வளாகத்துக்கு அடுத்ததாகவே வீடு வாடகைக்கு எடுத்திருந்தார்.


மதியம் இரண்டு மணி இருக்கும். "மேடம் என்னுடைய மொபைல் காணவில்லை" என்று அலறினார் வானதி டீச்சர். 


யாரிடம் கேட்பது? எப்படி கண்டுபிடிப்பது? பள்ளியின் மூலை முடுக்கெல்லாம் தேடப்பட்டது. கால் செய்தால் சத்தம் கேட்கிறது. யாரும் எடுத்துப் பேசவும் இல்லை.  


ஒரே பரபரப்பு. வானதி டீச்சர் அழவே ஆரம்பித்து விட்டார். நோக்கியாவிற்கு என்னாயிற்று? எங்கே போனது?


டீச்சரின் மகள் சுகந்தி வீட்டிற்குச் சென்று கதவைத் திறந்து புத்தகப் பையை வைத்தவுடன் மொபைல் சத்தம்.


அப்படியென்றால் மொபைல் வீட்டில்தான் உள்ளது. பள்ளிக்கு ஓடி வந்துச் சொன்னாள்.


இரண்டு ஆசிரியருடன் வீட்டிற்கு வந்து 'நோக்கியாவை' தேடும் படலம் ஆரம்பமானது.


சத்தம் வரும் இடத்தை கண்டு பிடிக்கவே பத்து நிமிடமானது. பிறகு ஃபிரிட்ஜிலிருந்து சத்தம் வருவதை ஊர்ஜிதம் செய்து எல்லாவற்றையும் வெளியில் எடுத்துப் பார்த்தாயிற்று.


மறுபடி போன் செய்தால் 'சுவிட்ச் ஆப்' என்று வருகிறது. "டீச்சர் இங்கத்தான் இருக்கு, பாருங்க" என்று தெலுங்கில் செப்பிப் போய்விட்டார்கள்.


வானதி டீச்சருக்கு தலை சுற்றியது. மகளிடம் "அம்மாக்கு கொஞ்சம் காபியும், மிக்ஸர் வாங்கிருக்கேன், அந்தக் கவரையும் தரியாமா" என்று கேட்டாள்.


மகள் கொடுத்த காபியை குடித்தவாறே மிக்ஸர் பாக்கெட்டை திறந்தார் வானதி டீச்சர்.


இதோ அந்த அதிசயம் மிக்ஸர் பாக்கெட்டுக்குள் 'நோக்கியா'!


மகளை விட்டு பள்ளியில் நோக்கியாவை மிக்ஸர் பாக்கெட்டில் நோக்கியதை சொல்லிவிட்டு வரச்சொன்னார்.


மறுநாள் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற டீச்சரை சக ஆசிரியர்கள் கேலி செய்து சிரித்ததும் வானதி டீச்சருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.


அன்று முதல் பள்ளியில் வானதி டீச்சரும், மிக்ஸரும், மிக்ஸருக்குள் நோக்கியாவும் எல்லோருக்கும் அவல் கிடைத்தாற் போல் ஆனது.


வானதி டீச்சருக்கு மொபைல் கிடைத்த சந்தோஷம். வேறு எதைப்பற்றியும் கவலைப் படவில்லை.


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%