மாணவர்களுக்கு ஆதார் அட்டையில் மொபைல் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
Sep 26 2025
33

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் (MSU College, Tisayanvilai) தபால் துறை சார்பில் ஆதார் அட்டையில் மொபைல் எண் சேர்க்கும்/திருத்தும் சிறப்பு முகாம் 26.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் டி. லில்லி அவர்கள் தலைமை தாங்கினர்.
மாரியா மெடோனா தபால் நிலையத்தின் பிரிவு தபால் அலுவலர் (Branch Post Master) மாணவர்களுக்கு நேரடியாக ஆதார் அட்டையில் மொபைல் எண் சேர்க்கும், திருத்தும் சேவையை வழங்கினார்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் எஸ். பலவேசகிருஷ்ணன் அவர்கள் முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
இந்த முகாமின் மூலம் பல மாணவர்கள் தங்களது ஆதார் அட்டையில் மொபைல் எண் இணைத்துக் கொண்டனர்.
இந்த முகாம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?