பக்கவாத நோயாளிக்கு வி.எஸ். மருத்துவமனையில் நவீன காந்த அலை சிகிச்சை அறிமுகம்
Jan 04 2026
22
சென்னை, ஜன
நரம்பியல் ரீதியான பிரச்சனை உடைய பக்கவாத பாதிப்பு நோயாளிகளுக்காக, அதிநவீன சிகிச்சை முறையை சென்னையில் வி.எஸ். மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த நவீன, அறுவை சிகிச்சையற்ற நடைமுறையில் காந்த அலைத் துடிப்புகளைப் பயன்படுத்தி, மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் தூண்டப்படுகின்றன. இதன் மூலம் பக்கவாதம், நரம்பியல் பிரச்சினைகளால் ஏற்படும் வலி, மன அழுத்தம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இது பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவுகள் மிகக் குறைவானது.
மருத்துவமனையின் செயல் இயக்குநர் முத்து சுப்ரமணியன், குழுமத் தலைமைச் செயல் அலுவலர் பிரசன்னா, முதுநிலை நரம்பியல் மருத்துவ ஆலோசகர் டாக்டர். எல். சிந்துஜா மற்றும் மருத்துவமனையின் நிறுவனரும் மருத்துவ இயக்குநருமான முதுநிலை எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் எஸ். சுந்தர் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
வழக்கமான மருந்து மற்றும் சிகிச்சைகள் மூலம் போதிய பலன் கிடைக்காத நோயாளிகளுக்கு இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களது உடல் பிரச்சினையின் அடிப்படையில், மூளையின் தேவைப்படும் பகுதியில் மின்காந்த அலைகள் மூலம் அதிர்வு அளிக்கப்படுகிறது. எனவே, இது ஒவ்வொரு நபரின் மூளைக்கும் ஏற்றாற்போல வடிவமைக்கப்படும் தனிப்பட்ட சிகிச்சை முறையாகும்.
பக்கவாதத்திற்குப் பிறகு உண்டாகும் உடல் பலவீனம் மற்றும் பேச்சுக் குறைபாடு, கடுமையான நாள்பட்ட தலைவலி, நீண்டகால நரம்பு வலி, பார்கின்சன் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற பாதிப்புகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், கடுமையான மனச்சோர்வு, ஓ.சி.டி மற்றும் பதற்றக் கோளாறு போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கும் இச்சிகிச்சை நல்ல பலன் தரக்கூடியது.
இதன் நரம்பியல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் எல். சிந்துஜா பேசுகையில், “டி.எம்.எஸ் என்பது அறுவை சிகிச்சையின்றி நோயைக் குணப்படுத்தக்கூடிய பாதுகாப்பான முறையாகும். குணமடைய அதிக காலம் பிடிக்கும் நீண்ட கால நோய்கள், ஏற்கனவே மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தும் எளிதில் குணமடையாத தலைவலிகள், நரம்பு சார்ந்த வலி மற்றும் உடல் இயக்கத்தின் நரம்பியல் பிரச்சினைகள் ஆகியவற்றால் தவிக்கும் நோயாளிகளுக்கு இது கணிசமாக உதவக் கூடியது’’ என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?