வயிற்றை எரிக்கும்
பசித் தீயினை
வாய்ப் பாட்டு நீரால்
அணைப்பேன்!
உயிரென்னைத் தினமும்
ஒற்றைக் கேள்வி கேட்குது... சோறெங்கே?
கடும் வெயிலதில்
கால் கிழிய நடந்தாலும்
கனவில் கூட கிடைப்பதில்லை
கால் வயிற்றுக் கஞ்சி!
காலிச்சட்டி காட்டுது
கண்ணாடியாகி
என் முகத்தை!
“பசி எனக்கு விதியெனில்
பாடல் எனக்குப் போர்வை” .
உலகமெலாம் மௌனமாய்
உதட்டசை கூட இல்லாமல்
வயிற் றழுகையைக் கேளாமல்
வல்லமை கொண்டதின்று!
அம்மா என்றொரு
அன்பில்லை
அன்னம் என்றொரு
நிழலில்லை
தொண்டையிலே பிறக்குது
துயரத்தைத் துடைக்கும் பாட்டு.
இன்றிரவு இசையெனும்
இரையுண்டு உறங்கிடுவேன்
நாளை வரும்
சோறு என்னும்
நம்பிக்கை ராகத்தில்!
பசியை ஏமாற்றும்
பலமான ஆயுதம்
பாட்டே… பாட்டே…
பாட்டொன்றே!
--------------------------

முகில் தினகரன்,
கோயமுத்தூர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?