பட்மேடு ஜி.கே.எம். காலனி ஸ்ரீ வரலட்சுமி – ஸ்ரீ சக்தி – ஸ்ரீ சரஸ்வதி ஆலயத்தில் நவராத்திரி விழா
Sep 25 2025
22

சென்னை, செப். 23–
சென்னை பட்மேடு ஜி கே எம் காலனி 36 வது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வரலட்சுமி ஸ்ரீ சக்தி ஸ்ரீ சரஸ்வதி ஆலயத்தில் 11ம் ஆண்டு நவராத்திரி கொலு கண்காட்சி திருவிழா நேற்று (22 ஆம் தேதி) முதல் துவங்கியது. அடுத்த மாதம் 2 ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரச்சையாக நடைபெறுகிறது.
ஸ்ரீ லட்சுமி – ஸ்ரீ சக்தி – ஸ்ரீ சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் திருவருள் துணை கொண்டு ஆன்மீக கொடை வள்ளல் டி.கே. இராஜா பாதர் செட்டியாரின் மகன் டி ஆர் வேலுமணி –- வி.லட்சுமி தம்பதியரால் கட்டப்பட்ட நவராத்திரி கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அதே போல் இந்த ஆண்டும் நவராத்திரி உற்சவம் நேற்று 22–ந் தேதி மாரியம்மன் அலங்காரம் நடந்தது. இரண்டாம் நாள் ஸ்ரீ வராகி அம்மன் அலங்காரமும், மூன்றாம் நாள் ஸ்ரீ அன்னபூரணி அலங்காரமும், நான்காம் நாள் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அலங்காரமும், ஐந்தாம் நாள் ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரமும், ஆறாம் நாள் ஸ்ரீ வைஷ்ணவி அலங்காரமும், ஏழாம் நாள் ஸ்ரீ விசாலாட்சி அம்மன் அலங்காரமும்,
எட்டாம் நாள் ஸ்ரீ சிவன் பார்வதி அலங்காரமும், ஒன்பதாம் நாள் ஸ்ரீ புவனேஸ்வரி அலங்காரமும், பத்தாம் நாள் ஸ்ரீசரஸ்வதி அலங்காரமும், பதினோராம் நாள் ஸ்ரீ மகிஷாசுரவர்த்தினி அலங்காரமும் வெகு விமர்ச்சையாக நடைபெறுகிறது.
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ லட்சுமி ஸ்ரீ சக்தி ஸ்ரீ சரஸ்வதி அம்பாள்களின் அருளைபெபற்று வருகிறார்கள்.
நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆர்.ஆர் ஆன்மீக அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் டி .ஆர் குணசேகர் எல். கஜேந்திரன் ஆர். குமரன் ஆர். பார்த்திபன் ஜி. குமரேசன் ஆலய அர்ச்சகர் வி அரவிந்த் ஆகியோர் சிறப்பான முறையில் செய்து வருகிறார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?