சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த "கலாச்சாரம், காலநிலை, அண்டம்"​ குறித்த ​மாநாடு: 57 கட்டுரைகள் சமர்ப்பிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த "கலாச்சாரம், காலநிலை, அண்டம்"​ குறித்த ​மாநாடு: 57 கட்டுரைகள் சமர்ப்பிப்பு

சென்னை, செப். 23-–


சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறை மற்றும் வனமா கலை, கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை இணைந்து, "கலாச்சாரம், காலநிலை மற்றும் அண்டம்" என்ற கருப்பொருளில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன.இந்தக் கருத்தரங்கம் கலாச்சாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அண்டம் குறித்த புரிதலை மானுடவியல் கண்ணோட்டத்தில் ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது.


​மாநாட்டின் துவக்க விழாவில், சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் பிரபு குமாரி வனமா வரவேற்று பேசினார். சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் ஆங்கிலத் துறை தலைவர் டாக்டர் எஸ். ஆம்ஸ்ட்ராங், மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மேற்கத்திய நாடுகளில் உள்ள அளவுக்கு மானுடவியல் மற்றும் தொல்லியல் துறைகள் இந்தியாவில் அங்கீகாரம் பெறுவதில்லை என்றும் "கலாச்சாரம் இல்லாமல், இந்த உலகில் மானுடம் இருக்க முடியாது" என்றும், "ஒவ்வொரு நாடும் தாய் பூமியைக் காக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.


57 கட்டுரைகள் சமர்பிப்பு


​அரசு கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் டி. தங்கராஜன், மூன்று 'C'க்கள் (Culture, Climate, Cosmic) குறித்து விரிவாகப் பேசினார். அதைத் தொடர்ந்து, கேரளப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை முன்னாள் தலைவர் டாக்டர் எஸ். கிரிகோரி, மானுடவியலின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். கலைமாமணி ஆச்சார்யா சூடாமணி அனிதா குஹா சிறப்பு மலரை வெளியிட்டார். "கலை, நாம் இன்னும் பலவற்றைச் செய்யத் தூண்டுகிறது" என்று அவர் கூறினார்.


மானுடவியல் துறைத் தலைவர் மற்றும் மாநாட்டு இயக்குநர் டாக்டர் எம்.பி. தாமோதரன் தலைமை உரையாற்றினார். அண்டத்துடன் இணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய அவர், மானுடவியல் துறை 85 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக பெருமையுடன் தெரிவித்தார்.


3 நாள் சர்வதேச மாநாடு செப்டம்பர் 17 ந்தேதி தொடங்கி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நிறைவடைந்தது. சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் ரீட்டா ஜான் நிறைவுரையாற்றினார். இந்த மாநாட்டில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 57 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இந்த விவாதங்களால் பயனடைந்தனர்.


​வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் டீன் டாக்டர் சி. ஜோதி வெங்கடேஸ்வரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. வெங்கட் ஆடிசேஷையா இந்த விருதை வழங்கினார். மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு, வெங்கட் ஆடிசேஷையா சான்றிதழ்களை வழங்கினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%